Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜெர்மனி உடனான வர்த்தகம்: 310 பில்லியன் யூரோவாக உயர்த்த இலக்கு

ஜெர்மனி உடனான வர்த்தகம்: 310 பில்லியன் யூரோவாக உயர்த்த இலக்கு

பசுமைப் பொருளாதார மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியா – ஜெர்மனி இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை தற்போதைய 31.5 பில்லியன் யூரோவிலிருந்து 310 பில்லியன் யூரோவாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா – ஜெர்மனி இடையிலான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இரு நாடுகளுக்கும் இடையே தொழில்துறை ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

ஜெர்மனியின் பொறியியல் தொழில்நுட்பம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தரம் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றுடன், இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் திறன்கள் மற்றும் இளம், திறமையான மனிதவளத்தை இணைப்பதன் மூலம் இரு நாடுகளும் பெரும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இரு தரப்பு வர்த்தகத்தை 310 பில்லியன் யூரோவாக உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய துறைகளை இரு நாடுகளின் நிறுவனங்களும் அடையாளம் காண வேண்டும். தங்களுக்குள்ள போட்டித்திறன் மற்றும் சாதகமான அம்சங்களை மதிப்பிட்டு, செயல்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.

மேலும், பசுமைப் பொருளாதார மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என்ற நிலையைத் தாண்டி, இரு நாடுகளும் இணைந்து உருவாக்கும் பொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

'4 மாதங்களில் அமலுக்கு வரும்'

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பல ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தார். தேவையான நாடாளுமன்ற நடைமுறைகள் முடிவடைந்ததும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில் ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முந்தைய செய்தி
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 44 காசுகள் சரிவு
அடுத்த செய்தி
eMudhra பங்குகள் 20% வீழ்ச்சி

தொடர்புடைய செய்திகள்